’உன்னை கொலை செய்துவிடுவேன்!’ ஊடகவியலாளரை மிரட்டிய நடிகர் பாலகிருஷ்ணா

மக்கள் முன்னிலையில் பொது இடத்தில், நிதானம் இழந்து ஊடகவியலாளரை மரியாதையின்றி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது இடத்தில் பாலகிருஷ்ணா நிதாமின்றி செயல்படுவது இது முதல்முறையல்ல.

news18
Updated: March 28, 2019, 5:38 PM IST
’உன்னை கொலை செய்துவிடுவேன்!’ ஊடகவியலாளரை மிரட்டிய நடிகர் பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா
news18
Updated: March 28, 2019, 5:38 PM IST
வீடியோ எடுப்பதை நிறுத்து.. இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று புகைப்படக் கலைஞரை நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணா மிரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக, அரசியல்கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணா, இந்தமுறையும் ஹிந்துபுர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதற்காக, நேற்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருடைய பிரச்சாரத்தை ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்து எரிச்சலடைந்த பாலகிருஷ்ணா, புகைப்படக் கலைஞரை ராஸ்கல்.. என்று அழைத்தார். ’போட்டோக்களை உடனே அழி... இல்லையென்றால், நான் உன்னை கொலை செய்துவிடுவேன். எனக்கு எப்படி குண்டு வீச வேண்டும் என்று தெரியும். கத்தி வீசவும் தெரியும்’ என்று திட்டினார்.

மக்கள் முன்னிலையில் பொது இடத்தில், நிதானம் இழந்து ஊடகவியலாளரை மரியாதையின்றி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது இடத்தில் பாலகிருஷ்ணா நிதாமின்றி செயல்படுவது இது முதல்முறையல்ல.

பின்னர், வழக்கம் போல ட்விட்டரில் பாலகிருஷ்ணா மன்னிப்பு கோரினார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘என் மீதுதான் தவறு உள்ளது. வீடியோ எடுப்பவர்கள் குழந்தைகளை தவறாக வீடியோ எடுக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள், ஊடகவியலாளர்கள் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய செயலால் கஷ்டப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

பாலகிருஷ்ணா பொது இடத்தில் தவறாக நடந்துகொள்வது இது முதல்முறையல்ல. பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க முயன்ற பொதுமக்களை அடித்த சம்பவம் அவர் அடித்த சம்பவம் ஒருமுறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Also see:
Loading...
First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626