நான் ஊழல் செய்தேன் என நிரூபிக்க முடியுமா? மோடியையும் சந்திப்பேன் அவர் தாத்தாவையும் சந்திப்பேன்: நாராயணசாமி ஆவேசம்

நான் ஊழல் செய்தேன் என நிரூபிக்க முடியுமா? மோடியையும் சந்திப்பேன் அவர் தாத்தாவையும் சந்திப்பேன்: நாராயணசாமி ஆவேசம்

நாராயணசாமி

புதுச்சேரியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாராயணசாமி ‘நான் ஊழல் செய்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா?’ மோடிக்கு தெரியும் என்னைப் பற்றி அவர் வந்தாலும் சரி அவர் தாத்தா வந்தாலும் சரி சந்திப்பேன்’ என்று கோபாவேசமாகப் பேசியுள்ளார்.

 • Share this:
  புதுச்சேரியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாராயணசாமி ‘நான் ஊழல் செய்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா?’ மோடிக்கு தெரியும் என்னைப் பற்றி அவர் வந்தாலும் சரி அவர் தாத்தா வந்தாலும் சரி சந்திப்பேன்’ என்று கோபாவேசமாகப் பேசியுள்ளார்.

  புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்த நிலையில், அங்கே குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

  புதுச்சேரியில், நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பெரும்பான்மையை இழந்தது. நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

  இந்நிலையில், நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். அதனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

  இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாராயணசாமி காட்டமாகப் பேசியுள்ளார். அதில் 5 ஆண்டுகள் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்துள்ளேன். நான் ஊழல் செய்தேன் என்று நிரூபிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன் என்று கோபமாகப் பேசினார்.

  அவர் கூறியதாவது, இதைச்சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் இந்தச் சதியில பங்கேற்றுள்ளது. இப்படி இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வேலையைச் செய்து... இன்னும் 10 நாள் இருக்கு.. 5 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிச்சிருக்கேன். இதுஎனக்கு ஒரு மன நிம்மதி, மனநிறைவு.

  ஆனால் நான் எதைப்பற்றியும் அஞ்ச மாட்டேன். நான் நரேந்திர மோடிக்கே சவால் விட்டிருக்கிறேன். ஒரு ஊழலற்ற ஆட்சியை புதுச்சேரிக்கு அளித்திருக்கிறேன். நான் பிரதமர் அலுவலகத்துல அமைச்சராக இருந்தேன். விண்வெளி ஆராய்ச்சித் துறை அமைச்சரா இருந்தேன், அணுசக்தி துறை அமைச்சரா இருந்தேன். அப்படி மன்மோகன் சிங்குடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

  இந்த 5 ஆண்டுகாலம் ஊழலில்லத ஆட்சியை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். யாரும் நாராயணசாமி ஊழல் செய்தார் என்று சொல்ல முடியாது. நிரூபிக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன். மோடிக்குத் தெரியும் நாராயணசாமி யாருன்னு, மோடியையும் சந்திப்பேன், மோடியோட தாத்தாவையும் சந்திப்பேன் என்று கோபாவேசமாகப் பேசினார் நாராயணசாமி.
  Published by:Muthukumar
  First published: