ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஷாருக் கானை உயிரோடு எரிப்பேன் - பதான் பட விவகாரத்தில் சாமியார் சர்ச்சை கருத்து

ஷாருக் கானை உயிரோடு எரிப்பேன் - பதான் பட விவகாரத்தில் சாமியார் சர்ச்சை கருத்து

சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா

சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா

பதான் படத்திற்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இந்த படம் வெளியிடாமல் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

பதான் பட விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை உயிரோடு எரித்துவிடுவேன் என இந்து சாமியார் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்துள்ள பதான், படத்தில் இடம்பெற்றுள்ள பேஷ்ரம் ரங் பாடலில், தீபிகா படுகோனே காவி நிற பிக்னி அணிந்ததற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இந்த படம் வெளியிடாமல் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி

இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த இந்து சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்துவிடுவேன் என கூறியுள்ளார். மேலும், யாராவது ஷாருக் கானை உயிரோடு எரித்தால், அவருக்காக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன் எனவும் கூறினார்.

காவி நிறத்தை அவமதிப்பு செய்த பதான் படத்தை திரையிடும் திரையரங்குகளையும் எரிப்போம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: Bollywood, Deepika Padukone, Movie, Shah rukh khan