சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு முன் பதிவிட்ட நெகிழ்ச்சியான ட்வீட்!

News18 Tamil
Updated: August 7, 2019, 7:25 AM IST
சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு முன் பதிவிட்ட நெகிழ்ச்சியான ட்வீட்!
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
News18 Tamil
Updated: August 7, 2019, 7:25 AM IST
வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, ட்விட்டர் கணக்குகள் மூலம், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் புகார்கள் மீது சுஷ்மா சுவராஜ் துரித நடவடிக்கை எடுத்தார்.

குறிப்பாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு, நைஜீரியாவில் சிக்கிய இந்திய மாலுமிகள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செய்துமுடித்தார் சுஷ்மா.

இதனால் பொதுமக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பாராட்டுகளை பெற்றார். இருந்த போதும் நிதி மோசடி வழக்கில் சிக்கிய லலித் மோடி இங்கிலாந்து தப்பிச் செல்ல உதவியதாகவும் சர்ச்சையிலும் சிக்கினார்.
Loading...இறுதியாக நேற்று மாலை 7 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், அரசியல் சாசனப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்த நாளை காண்பதற்காக தான், தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...