ஹோம் /நியூஸ் /இந்தியா /

2ஜி வழக்கில் காங்கிரஸின் மௌனமே ஆட்சியை வீழ்த்தியது: ஆ.ராசா குற்றச்சாட்டு

2ஜி வழக்கில் காங்கிரஸின் மௌனமே ஆட்சியை வீழ்த்தியது: ஆ.ராசா குற்றச்சாட்டு

  • News18
  • 1 minute read
  • Last Updated :

2ஜி வழக்கு என்பதே ஜோடிக்கப்பட்ட ஒன்று என வழக்கின் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தார் ஆ.ராசா. இந்த வழக்கிற்கு கடந்த மாதம் நீதிபதி ஓபி ஷைனி, போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவிப்பதாக தீர்ப்பளித்திருந்தார்.

இதையடுத்து ஆ.ராசா எழுதிய 2ஜி வழக்கின் பின்புலதினைக் குறித்த புத்தகம் நாளை வெளியிடப்பட இருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீர்ப்புக்கு பிறகு புத்தகத்தை வெளியிடலாம் என்று சிலர் கூறியதால் தற்போது வெளியிட்டிருக்கிறேன். புத்தகத்தில் அரசியல் ரீதியாகவும், வழக்கிலும் எனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். பிரதமர் மன்மோகன் சிங் 2ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார். 2ஜி விவகாரத்தில் அவர்கள் காட்டிய மவுனம் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசை வீழ்த்தியது. உச்சநீதிமன்றத்திற்கெல்லாம் பயப்படாமல் உள்ளதை உள்ளபடி அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலோ, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலோ விசாரணை கமிஷன் அமைத்து 2ஜி விவகாரத்தின் பின்புலம் என்ன என்பதை கண்டறிய வேண்டும், 2ஜி,கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியா அல்லது மன்மோகன் சிங் அரசை வீழ்த்துவதற்காக அரசியல் ரீதியாக திட்டம் தீட்டப்பட்டதா என்பதையும் ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வினோத்ராய் வேண்டுமென்றே அவருடைய துறையே ஒப்பு கொள்ளாத, கற்பனைக்கே எட்டாத ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி மோசடி என்று திட்டமிட்டே நாட்டையும் அரசையும் வீழ்த்தி இருக்கிறார் என கூறிய அவர் இது குறித்து விரைவில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து இந்த விஷயங்களையெல்லாம் சொல்லி அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் 2ஜி விவகாரத்தில் கருணாநிதியும், ஸ்டாலினும் தனக்கு பக்க பலமாக இருந்தார்கள் என்றும்  கூறியுள்ளார்.

First published:

Tags: Lok Sabha Key Candidates