Home /News /national /

நான் தமிழ் கற்க வேண்டும் என நினைக்கிறேன் - ராகுல் காந்தி

நான் தமிழ் கற்க வேண்டும் என நினைக்கிறேன் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

தான் அங்கு ஒரு காங்கிரஸ் தொண்டனாக பங்கேற்றுள்ளதாகவும் தலைமை ஏற்று நடத்தவில்லை எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagercoil, India
“நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அது மிகவும் அழகான மொழி அதே சமயம் அது கற்பதற்கு கடினமான  இருக்கும் என எண்ணுகிறேன்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் பயணத்தின் 3ஆம் நாளான இன்று நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிமீ பயணம் செய்தார். பின்னர் பிற்பகல் 1 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் தமிழில் கேள்வி எழுப்பினர்.

இதையும் வாசிக்க: நேதாஜியை பின்பற்றி நடந்திருந்தால் பாரதத்தின் பெருமை பன்மடங்கு உயர்ந்திருக்கும் - பிரதமர் மோடி

அதற்கு பதிலளித்த அவர், நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அது மிகவும் அழகான மொழி ஆனால் அது கற்க மிகவும் கடினமாக இருக்கும் என கருதுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் தலைமையை ஏற்காமல், இந்த ஒற்றுமை பயணத்திற்கு மட்டும் தலைமை ஏற்கிறீர்களே அது முரண்பாடாக இல்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், தான் அங்கு ஒரு காங்கிரஸ் தொண்டனாக பங்கேற்றுள்ளதாகவும் தலைமை ஏற்று நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் தலைவராக தான் வருவதா வேண்டாமா என தலைவர் பதவிக்கான தேர்தலின் போது தெளிவாக தெரியும் என கூறினார். மேலும் “நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டேன், என் மனதில் எந்த குழப்பமும் இல்லை” என கூறினார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Congress, Kanniyakumari, Rahul gandhi

அடுத்த செய்தி