பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

 • Share this:
  பிரபல பாலிவுட் நடிகராக இருந்துவருபவர் சோனு சூட். இவர், தமிழிலும் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ஓடிவந்து உதவினார் சோனு சூட்.

  தன்னுடைய சொத்துகளை அடகுவைத்து கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவியதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தார். பீகார் புலம் பெயர் தொழிலாளர்கள் சாலைகளில் பேனர் வைத்து சோனு சூத்துக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.

  இந்தநிலையில், டெல்லி மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகளுக்கு சோனு சூட்டை விளம்பரத் தூதராக நியமித்தது. அதனையடுத்து, அவர் ஆம் ஆத்மியில் சேர்கிறாரா என்று கேள்வி எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தநிலையில், மும்பையிலுள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு  நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Karthick S
  First published: