’தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி நான்!’- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி

தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறையாது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது தமிழ் மொழி தனக்கு பிடித்தமான மொழி என்று பேசினார்.

  உலகிலேயே தமிழ்மொழி சிறந்த மொழி. தமிழ் மொழி எனக்கு மிக பிடிக்கும். இந்த மொழியின் ரசிகன் நான். நான் உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி. தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது. தமிழ் குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

  Also Read: #Cheer4india : மன் கி பாத் உரையில் சென்னை வீராங்கனை பவானியை நினைவுக்கூர்ந்த பிரதமர் மோடி

  மேலும் சென்னையை சேர்ந்த குரு பிரசாத் மன் கி பாத் உரையின் போது தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்தும் தான் பேசியதை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டார்.  MyGov தளத்தில் குருபிரசாத் அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை மேற்கொள்ள காட்ட விரும்புகிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  “நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம் என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. தமிழ் மொழி, கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ அதனை ஒன்று திரட்டி மின் புத்தகம் ஒன்றை நான் தயார் செய்திருக்கிறேன். இதனை NamoApp -ல் வெளியிட முடியுமா எனக் குரு பிரசாத் கேட்டுக்கொண்டதாக மோடி கூறினார்.  தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறையாது. உங்கள் வருங்கால முயற்சிகளுக்காக வாழ்த்துக்கள்’ என மோடி தனது உரையில் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: