• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • என்னை விமர்சிப்பவர்களை பெரிதும் மதிக்கிறேன்; ஆனால்.. பிரதமர் மோடி

என்னை விமர்சிப்பவர்களை பெரிதும் மதிக்கிறேன்; ஆனால்.. பிரதமர் மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

என்னை விமர்சிப்பவர்களை மிக நேர்மையான மனதுடன், பெரிதும் மதிக்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இன்று இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு சுய சார்பு கொள்கை தான் முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓபன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, நம் நாடு தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

  என்ன சூழல் நிலவி இருக்கும்? உலகின் பெரும்பாலான மக்கள் தொகைக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இந்தியா இன்று, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு சுய சார்பு கொள்கை தான் முக்கிய காரணம்.

  நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 65 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 25 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் பெற்றுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இந்த டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போடுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

  பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினைகளை பற்றி தெரிந்துகொள்வதற்கு நேரம் இல்லாததால், குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்கள்.

  விமர்சிப்பவர்களை மிக நேர்மையான மனதுடன், மதிக்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பெரும்பாலான மக்கள் குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், விமர்சனங்களை முன்வைக்க ஒருவர் நிறைய கடின உழைப்பு, ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இன்றைய வேகமான உலகில், மக்களுக்கு இதற்கு நேரமில்லாமல் இருக்கலாம். இதனால், சில சமயங்களில் நான் விமர்சகர்களை இழக்கிறேன் என்றார்.

  மேலும், ஆராயச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "ஜெய் ஜவான் (ராணுவ வீரர்கள்), ஜெய் கிசான் (விவசாயிகள்), ஜெய் விக்யான் (விஞ்ஞானம்) என்ற தாரக மந்திரத்திலிருந்து ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) என்ற தாரக மந்திரத்திற்கு முன்னோக்கி செல்ல வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கூறியிருந்தேன்.

  உலகில் எந்த பகுதியிலும் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்காத சூழலில், ​​தடுப்பூசி இயக்கத்தை 2020 மே மாதத்தில் திட்டமிடத் தொடங்கினோம். முன்பெல்லாம் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க பல பத்தாண்டுகளாகிவிடும். எனவே, அப்படி இல்லாமல் தடுப்பூசி திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்திருந்தோம். இது வேகமாகவும் திறமையாகவும் குறிப்பிட்ட கால அளவில் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினோம்.

  கொரோனா வைரஸிற்கான இரண்டு தடுப்பூசிகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட், புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் மருந்து கட்டுப்பாட்டாளரிடமிருந்து அவசர ஒப்புதலைப் பெற்றதாக கூறினார்.

  தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஏழைகள் இன்று அவருக்கு தேவையான சேவைகளைப் பெற காத்திருக்கவோ, லஞ்சம் கொடுக்கவோ தேவையில்லை. நகரத்தில் கூடியேறிய ஒரு ஏழை, தனது கிராமத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருந்தாலும், அவர் பணிபுரியும் நகரத்தில் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் தடையின்றி தடுப்பூசி பெறுவதை தொழில்நுட்பம் உறுதி செய்கிறது என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: