ஹோம் /நியூஸ் /இந்தியா /

தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை மீட்க என் உயிரை பணயம் வைக்க முடிவு செய்தேன் - ரயில்வே ஊழியர்

தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை மீட்க என் உயிரை பணயம் வைக்க முடிவு செய்தேன் - ரயில்வே ஊழியர்

ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே

ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே

வாங்கினி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை மீட்க என் உயிரை பணயம் வைக்க முடிவு செய்தேன் என ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மகாராஷ்டிரா மாநிலம் வாங்கினி ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பார்வையற்ற தாய் தனது மகனுடன் பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தின் ஒரத்தில் நடந்து சென்ற சிறுவன் தடுமாறி தண்டவாளம் மீது விழுந்தான்.

  தண்டவாளத்தில் சிறுவன் விழுந்த உடன் தாய் செய்வது அறியாமல் அவரை எங்கு என்று தேடிக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் விழுந்த சிறுவனுக்கு எதிர்புறத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த மயூர் ஷெல்கு என்ற ரயில்வே ஊழியர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் ஓடி வந்து சிறுவனை பிளாட்பிரத்தில் தூக்கி கொண்டு தானும் ஏறினார்.

  ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கின் துரிதமான செயலால் சிறுவனின் உயிர் நூழையில் மீட்கப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மயூரை அழைத்துப் பேசி பாராட்டியுள்ளார்.

  இந்நிலையில் வாங்கனி ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மயூருக்குக் கைகளை தட்டி, இன்று மரியாதை செலுத்தினர். அவருக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

  இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே, '' நடைமேடையில் கண் பார்வையற்ற தாய் எதுவும் செய்ய முடியாமல், தனது குழந்தையைக் காப்பாற்றத் தவித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாகக் குழந்தையைக் காப்பாற்ற முடிவு செய்து, குழந்தையை நோக்கி ஓடினேன். என் உயிரைப் பணயம் வைத்தாவது குழந்தையைக் கட்டாயம் மீட்க வேண்டும் என்று முடிவெடுத்து ஓடினேன். நல்வாய்ப்பாக என்னால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது'' என்று தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Indian Railways, Maharastra, Railway