நான் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்துவிட்டேன்: இதிலிருந்து விடைபெறுகிறேன் - பிரசாந்த் கிஷோர்

நான் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்துவிட்டேன்: இதிலிருந்து விடைபெறுகிறேன் - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

நான் தேர்தல் பணிகளிலிருந்து விலகுகிறேன் என்று தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது தொடர்பாக அக்கட்சிக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எப்படி இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்று விளக்குவது கடினமான விஷயம். ஆனால், மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். மத்திய அமைச்சர்கள் வந்து பிரச்சாரம் செய்வதால் மட்டும் வெற்றி உறுதியாகிவிடாது. அவர்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அது மட்டும் வெற்றி பெறுவதற்கு போதுமானது அல்ல. மாநிலத்தைச் சேர்ந்தவர், மாநிலத்தைச் சாராதவர் என்பது விவாதம் அல்ல.

    மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு பல விஷயங்களில் நீங்கள் சரியாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரம் 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் நீட்சியாக இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரத்தை மாற்றியுள்ளபோது பா.ஜ.க அதே பிரச்சாரத்தை திரும்பச் செய்தது. அவர்களுடைய பிரச்சாரத்தில் எந்த நேர்மறையான அம்சமும் இல்லை. மேற்கு வங்கத்தில் போட்டி என்பது மோடிக்கும் மம்தாவுக்கானதுதான். வேறு எந்த தலைவருக்கும் இந்தப் போட்டியில் பங்கு கிடையாது. எங்களுடைய எந்தப் பிரச்சாரம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்று கூறுவது கடினம்.

    ஆனால், நாங்கள் பெங்காலின் மகளுக்கு வாக்களிக்கவேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டோம். நான் இந்தப் பணியைச் செய்து முடித்துவிட்டேன். நான் இடைவெளி எடுத்துக்கொள்ளப் போகிறேன். நான் எந்தக் கட்சிக்காகவும் இனி வேலை செய்யப்போவதில்லை. நான் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்துவிட்டேன். நான் இன்னும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். நான் இங்கிருந்து விடைபெறுகிறேன்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: