நான் மோடி, அமித்ஷாவை வழிபடுகிறேன்: ம.பி. முன்னாள் முதல்வர்

காங்கிரஸ் தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நான் மோடி, அமித்ஷாவை வழிபடுகிறேன்: ம.பி. முன்னாள் முதல்வர்
சிவ்ராஜ் சிங் சவுகான்
  • News18
  • Last Updated: August 13, 2019, 9:04 AM IST
  • Share this:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்காக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தான் வழிபடத் தொடங்கி விட்டதாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை இதுவரை தான் தலைவர்களாக மட்டுமே கருதியதாகவும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் அவர்களை வழிபட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்  இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு செய்த வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேரு குறித்து சிவராஜ் சிங் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் மறுக்கத்தக்கது என்றும் கூறினார். மேலும் நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... செப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்