பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக சேம்பர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “இந்த நிலைக்கு வருவதற்கான உந்துதல் எங்கிருந்து கிடைத்தது? சிறு வயதில் உங்களின் கனவு என்னவாக இருந்தது? உங்களின் ரோல் மாடல் யார்? என்னும் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த கேள்வி கேட்கப்பட்டதும், மிக நல்ல கேள்வி, எனச்சொல்ல அவர், “எனக்கு கனவு ஒன்று இருந்ததாகத் தோன்றவில்லை. எனக்கு முன்னால் இருந்த வேலைகளை நான் செய்திருந்தேன். வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்திருக்கிறேன். எதையும் நானாக திட்டமிட்டுக்கொண்டதில்லை. விதி இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” என்று பதிலளித்தார்.
இந்திய மக்களையோ, எனக்கு இப்பணியைக் கொடுத்தவர்களையோ வருத்தமடைய செய்யாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம் என அவர் மேலும் பேசியுள்ளார்.
முன்னதாக, சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள், வணிகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கூறும்போது, ''தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பில் ஒருவர் கூட எம்.பி.யாக இல்லை. இருந்தபோதும் தமிழகத்துக்கு எவ்விதக் குறையும் இல்லாமல் பிரதமர் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்” என்று பேசியிருந்தார்.