”இந்த நாளில் எனது நண்பரின் நினைவு துயரம் தருகிறது” - மறைந்த முன்னாள் நிதியமைச்சர் குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி..

பிரதமர் மோடி - அருண் ஜெட்லி

உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி, உடல் உறுப்புகள் செயலிழப்பால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.

 • Share this:
  அருண் ஜெட்லியின் நினைவு தினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண் ஜெட்லியின் நினைவு நாளான இன்று, தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, அருண் ஜெட்லி குறித்து அவர் பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய உரையையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்திருப்பதுடன், எனது நண்பரின் இழப்பால் வாடுகிறேன். இந்தியாவுக்கு மிகுந்த ஊக்கத்துடன் சேவையாற்றிய அவர், நுண்ணறிவாளர், சிறந்த பண்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

  உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு தங்களின் மரியாதையைத் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க: அனைவராலும் அறியப்பட்ட, துடிப்பான தலைமை வேண்டும் - சோனியா காந்திக்கு 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடிதம்..

  கடந்த வருடம் பாஜக அடுத்தடுத்து தனது முக்கிய தலைவர்களை இழந்தது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைந்தார்.  உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி, அடுத்த மூன்று வாரங்களில் உடல் உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: