எனக்கு 117 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது – குமாரசாமி

news18
Updated: May 16, 2018, 6:47 PM IST
எனக்கு 117 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது – குமாரசாமி
குமாரசாமி
news18
Updated: May 16, 2018, 6:47 PM IST
எனக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூருவில் ஆளுநர் வஜுபாய் வாலாவை குமாரசாமி இன்று மாலை சந்தித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனதா தளம்  ஆட்சியமைப்பது தொடர்பான தீர்மான நகலை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் வழங்கியுள்ளோம். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 117 எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு  உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என்றார் குமாரசாமி.

குமாரசாமியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வரா  கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்த பின் தனது முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். மேலும், இதுபோன்ற தருணங்களில் பிற மாநிலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னுதாரணமாக கொண்டு முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்றார் ஜி.பரமேஷ்வரா.

காலையில் பாஜக; மாலையில் காங்கிரஸ்: இன்று காலை பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த சுயேட்சை எம்எல்ஏ சங்கர் மாலையில் தனது முடிவை மாற்றிக்கொண்டு காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரைக் காணவில்லை என்றும், அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாகவும் தகவல் வெளியானது. எனினும், அத்தகவல் புரளி என தெரியவந்தது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்