விசாரணை அறிக்கையை புகார் அளித்தவருக்கு தர மறுப்பது இயற்கை நீதிக் கொள்கையின் மீதான வன்முறை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியரின் பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமர்வு அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், விசாரணை அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், விசாரணை அறிக்கையை தனக்கு அளிக்க வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த பெண், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘புகார் அளித்தவருக்கு விசாரணை அறிக்கையை அளிப்பதற்கு எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? எப்படி? ஏன்? எந்த அடிப்படையில் என்னுடைய புகாரை எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எனக்கு உரிமை உள்ளது.
நீதிபதிகள் அமர்வு எனக்கு பாதகமான முடிவை எடுத்தது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. தொடக்கத்திலிருந்தே, இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளை நீதிபதிகள் அமர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் தடுப்புச் சட்டம் 2013-ன் பிரிவு 13-ன் இரு தரப்பினருக்கும் விசாரணை அறிக்கைக்கான நகலைப் பெறுவதற்கான உரிமை உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கும் இந்த வழக்கின் அறிக்கையை பெரும் உரிமை உள்ளது. புகார், ஆதாரமற்றவை என்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விசாரணை அறிக்கையை புகார் அளித்தவருக்கு வழங்காமல் இருப்பது இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கையின் மீதான வன்முறையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Justice Ranjan Gogai