வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி

வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தினருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததின் பேரில் பிரதமர் மோடி சென்றுள்ளார்.

  வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் விமானநிலையத்துக்கே வந்திருந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  வங்கதேச தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “ ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். வங்கதேச மக்களுக்காக அவர் தனது உயிரையே வழங்கினார். காந்தி விருதை இந்தியா அவருக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தினருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். எனக்கு 20 - 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். வங்கதேசத்தில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்கள் நன்கு தெரியும். அந்த புகைப்படங்களால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

  வங்கதேச சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர். வங்கதேசத்துக்காக உயிர் கொடுத்தவர்களை நாம் மறக்க மாட்டோம். ஷேக் முஜிபூர் ரகுமான் நம்பிக்கையின் கதிர். எந்த நாடும் வங்கதேசத்தை அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர் உறுதி செய்தார்.1971-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் முயற்சியும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வங்கதேசத்தில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.
  Published by:Ramprasath H
  First published: