• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாத்மா காந்தியை தேச தந்தையாக எண்ணவில்லை: சாவர்க்கர் பேரன்!

மகாத்மா காந்தியை தேச தந்தையாக எண்ணவில்லை: சாவர்க்கர் பேரன்!

ரஞ்சித் சாவர்க்கர்

ரஞ்சித் சாவர்க்கர்

சாவர்க்கர் தனது முதல் மன்னிப்பு கடிதத்தை 1911ம் ஆண்டு எழுதியதாகவும் அப்போது காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்துள்ளார் என்றும் 1915ம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு வந்தார் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன

  • Share this:
    இந்திய தேசத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான மக்கள் பங்களித்துள்ளதால் இந்தியா போன்ற நாட்டுக்கு  ஒரு 'தேசத்தின் தந்தை' இருக்க முடியாது என்று வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

    வீர சாவர்கர் குறித்த புத்தகமான ‘வீர சாவர்கர் - தேச பிரிவிணையை தடுத்திருக்கக்கூடிய மனிதர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த செவ்வான் அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காந்தி கேட்டுக்கொண்டதாலேயே வீர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    சாவர்க்கர் தனது முதல் மன்னிப்பு கடிதத்தை 1911ம் ஆண்டு எழுதியதாகவும் அப்போது காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்துள்ளார் என்றும் 1915ம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு வந்தார் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனிடையே, மகாத்மா காந்திக்கு பதிலாக வீர் சாவர்க்கரை தேச தந்தையாக பாஜக முன்னிலை படுத்தக்கூடும் என்று எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு தேசத் தந்தை இருக்க முடியாது

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த தேசத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான மக்கள் பங்களித்துள்ளனர். மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்று நான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்: ராஜ்நாத் சிங்!


    சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கோரவில்லை என்று தெரிவித்த அவர்,  “எனது தாத்தா அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு கோரினார். அவர் உண்மையில் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டிருந்தால், அவருக்கு ஏதாவது பதவி வழங்கப்பட்டிருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ.5000: கேரள அமைச்சரவை ஒப்புதல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: