யாரும் போராட்டத்திலோ, மரியாதை குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் - எடியூரப்பா ட்வீட்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என அவருக்கு எதிராக இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் மேலிட பொறுப்பாளர்களுக்கு கையெழுத்துடன் கடிதம் அனுப்பியுள்ளனர்.

  • Share this:
    எடியூரப்பாவின் ட்விட்டர் பதிவு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு அவரது சொந்தக் கட்சியிலே எதிர்ப்புகள் வலுக்கத்தொடங்கியுள்ளது. பொது மேடையிலே எடியூரப்பாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் . கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த புகைச்சல் நீடித்து வருகிறது. எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் மேலிட பொறுப்பாளர்களுக்கு கையெழுத்துடன் கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வந்தது.

    இந்நிலையில் மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் தனது மகனுக்கு கட்சியில்  மாநில அளவில் முக்கியப்பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26-ந் தேதி நடக்கவுள்ள பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் எடியூரப்பாவின் ட்விட்டர் பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். எடியூரப்பாவின் இந்த பதிவு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: