Home /News /national /

சித்தார்த் ட்விட் குறித்து கவலை இல்லை.. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்: சாய்னா நேவால்

சித்தார்த் ட்விட் குறித்து கவலை இல்லை.. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்: சாய்னா நேவால்

சித்தார்த்- சாய்னா

சித்தார்த்- சாய்னா

சாய்னா நேவால் அளித்துள்ள பேட்டியில், நடிகர் சித்தார்த்  முதலில் என்னைப் பற்றி ஏதோ தெரிவித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். அது ஏன் இவ்வளவு வைரலானது என்று கூட தெரியவில்லை. ட்விட்டரில் நான் டிரெண்டாகி வருவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நடிகர் சித்தார்த் தன்னை பற்றி விமர்சித்தது தொடர்பாக தான் கவலைப்படவில்லை என்றும் அவர் மன்னிப்புக் கோரியது மகிழ்ச்சி என்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

    பிரதமர்  நரேந்திர மோடியின் சமீபத்திய பஞ்சாப் பயணத்தின்போது  பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார். பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வகையில், டென்னிஸ் வீராங்கனையும் பாஜகவை சேர்ந்தவருமான சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,  பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பிரதமர் மோதி மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்து ரி-டிவிட் செய்த நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து ஆபாச பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.  சித்தார்த்தின் ட்விட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்புக் கோரினார். தவறான அர்த்தத்தில் தான் ட்விட் வெளியிடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: இழிவான மனநிலை..': நடிகர் சித்தார்த் விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்


    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்து சாய்னா நேவால், நடிகர் சித்தார்த்  முதலில் என்னைப் பற்றி ஏதோ தெரிவித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். அது ஏன் இவ்வளவு வைரலானது என்று கூட தெரியவில்லை. ட்விட்டரில் நான் டிரெண்டாகி வருவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.  சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி.

    ஒரு பெண்ணை இவ்வாறு குறி வைக்கக்கூடாது. பரவாயில்லை, நான் அதை நினைத்துக் கவலைப்படவில்லை. என்னளவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Siddharth, Saina Nehwal

    அடுத்த செய்தி