Football World Cup 2018

கர்நாடகாவின் ஃபிட்னஸ்தான் எனக்கு முக்கியம்: மோடிக்கு குமாரசாமி பதில்

news18
Updated: June 13, 2018, 1:35 PM IST
கர்நாடகாவின் ஃபிட்னஸ்தான் எனக்கு முக்கியம்: மோடிக்கு குமாரசாமி பதில்
மோடி மற்றும் குமாரசாமி
news18
Updated: June 13, 2018, 1:35 PM IST
கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி ஃபிட்னஸ் சவால் விடுத்த நிலையில்,  "என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும்,  என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சி குறித்த ஃபிட்னஸ்தான் எனக்கு முக்கியம்" என குமாரசாமி பதிலளித்துள்ளார். 

மக்கள் மத்தியில் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், பிரபலங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுமாறு மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதத்தில் வெளியிட்ட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்தார்.


இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். அதில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை டேக் செய்து அவரை ஃபிட்னஸ் சவாலுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து பிரதமருக்கு பதிலளித்துள்ள குமாரசாமி,  “என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும், என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பிட்னஸில்தான் அதிகமான அக்கறை செலுத்தி வருகிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவும் தேவை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்த தனது ட்விட்டர் பதிவில்,  “அன்புள்ள பிரதமர் மோடிக்கு, என்னுடைய உடல்நலத்தில் அக்கறை செலுத்தியதற்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய அன்றாட உடற்பயிற்சியில் யோகாவும், டிரட்மில்லில் ஓடுவதும் முக்கிய அங்கமாக இருக்கின்றன. ஆனால் என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும், என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிட்னஸில்தான் அதிகமான அக்கறை செலுத்தி வருகிறேன். அதற்கு உங்களது ஆதரவும் தேவை”  என தெரிவித்துள்ளார்.

First published: June 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்