• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் சுதந்திரமாக நடமாடுகிறார்: பிரியங்கா ஆதங்கம்

நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் சுதந்திரமாக நடமாடுகிறார்: பிரியங்கா ஆதங்கம்

நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் சுதந்திரமாக நடமாடுகிறார்: பிரியங்கா காந்தி ஆதங்கம்

நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் சுதந்திரமாக நடமாடுகிறார்: பிரியங்கா காந்தி ஆதங்கம்

உத்தர பிரதேச வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் கைதுசெய்துள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

  இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இதைத்தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நேற்றிரவு உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள கேரி பகுதிக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை போலீஸார் சீதாபூரில் தடுத்து நிறுத்தினர். அவரை அங்குள்ள விடுதி ஒன்றில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இது குறித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா, போலீஸார் தன்னை ஒரு குற்றவாளி போல் நடத்துவதாகக் கூறினார். அவர் வாரண்ட் எங்கே எனக் கேட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  தொடர்ந்து, தடுப்பு காவலில் உள்ள பிரியங்காக காந்தி அலைபேசி மூலம் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், லக்னோவிலிருந்து 130 கிமீ தொலைவில் லக்கிம்பூர் புறநகரில் பகுதியில் வைத்து அதிகாலை 4 மணியளவில் போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர். முதலில், 144 தடை உத்தரவை மீறுவதாக கூறி என்னை தடுப்பு காவலில் வைக்க அழைத்துச் செல்வதாக கூறினார்.

  பின்னர், அவர்கள் என்னை (எதிர்காலத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போகிறார்) என்ற அடிப்படையில் 151 வது பிரிவின் கீழ் கைது செய்வதாக கூறினர். நான் எதற்காக கலவரத்தை ஏற்படுத்தப் போகிறேன்? குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வரும் அரசியல் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். குற்றம்ச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவரது மகனும் கைது செய்யப்படவில்லை. ஆனால், நான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: