முகப்பு /செய்தி /இந்தியா / தாலிபான்களால் பிரியாணி விலை எகிறப்போகுது - காரணம் இது தான்!

தாலிபான்களால் பிரியாணி விலை எகிறப்போகுது - காரணம் இது தான்!

ஹைதராபாத் பிரியாணி

ஹைதராபாத் பிரியாணி

ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தான் வழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்தை நிறுத்தியிருக்கின்றனர்.

  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதால் ஹைதராபாத் பிரியாணி விலை விரைவில் ஏறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அடக்குமுறையாக செயல்பட்டு வருகின்றனர் என்பது உலகம் அறிந்த ஒன்றே. வன்முறை வெறியாட்டங்களை ஆண்டுக்கணக்கில் நிகழ்த்தி வந்த தாலிபான்கள் கையில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் சென்றுவிட்டது. இனி அவர்களின் ஆட்சி தான் என்பது உறுதியாகி விட்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு பிற நாடுகளுக்குமிடையேயான உறவில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

Also Read: அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி அரசின் சலுகைகளை பெற இது தான் ஒரே வழி!

குறிப்பாக ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றும் முன்னர் வரை இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமான உறவு மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. சகோதரத்துவத்துடன் அந்த நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை பெரும் பொருட்செலவில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது. இனி முன்பு போல ஒரு சூழல் இருக்கப்போவதில்லை என்பது நிச்சயமாகிவிட்டது.

ஹைதராபாத் பிரியாணி

தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியிருக்கும் நிலையில் இந்தியாவில் பிரபல ஹைதராபாத் பிரியாணி உணவு வகையின் விலை எகிறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் பிரியாணி விலை ஏற காரணம் என்ன?

ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தான் வழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்தை நிறுத்தியிருக்கின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி வந்த உலர் பழங்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

ஹைதராபாத் பிரியாணி

இந்தியா கிட்டத்தட்ட 85% உலர் பழங்கள் இறக்குமதியை ஆப்கானிஸ்தானிடமிருந்தே பெற்று வந்தது. இந்த உலர் பழங்கள் தான் ஹைதராபாத் பிரியாணி உணவு வகையின் சிறப்புக்கு அஸ்திவாரமாக இருந்து வருகிறது.

Also Read:    என்னது ரூ.5 கோடிக்கு வாட்சா.. திகைக்க வைத்த ஹர்திக் பாண்டியா…!

இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குனர் ஜெனரலான டாக்டர் அஜய் சஹய் இது குறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கான இறக்குமதி அனைத்து பாகிஸ்தான் வழியாகவே வந்து கொண்டிருந்தது. தாலிபான்கள் தற்போது அந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்திருப்பதால் இந்தியாவுக்கான இறக்குமதி முற்றிலும் தடைபட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படவில்லை என்றால் தற்போது கையிருப்பில் உள்ள உலர் பழங்கள் தீர்ந்து போவதுடன் மாற்று இறக்குமதி வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

top videos

    டெல்லியைச் சேர்ந்த மிகப்பெரிய உலர் பழங்கள் வணிகர் ஒருவர் கூறுகையில் ஆப்கனில் இருந்து கிடைத்து வந்த வால்நட், அப்ரிகோட் மற்றும் பாதாம் போன்றவற்றி விலை கடந்த சில நாட்களில் இருமடங்காக, மும்மடங்காக அதிகரித்திருப்பதாக கவலை தெரிவித்தார்.

    First published:

    Tags: Briyani, Taliban