143 பேர் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் பகீர் புகார்.. நடந்தது என்ன?

பத்தாண்டுகளில் 143 பேர் தன்னை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக இளம்பெண் அளித்துள்ள புகார் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
ஐதராபாத்தில் 143 பேர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக 25 வயது இளம்பெண் ஒருவர் பகீர் புகார் அளித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் 143 பேர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமை செய்தனர்.... நிர்வாணப்படுத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோக்களை எடுத்தனர்.... 10 க்கும் மேற்பட்ட நிர்வாண செல்பி வீடியோக்களை மிரட்டி அடித்து துன்புறுத்தி எடுக்க வைத்தனர்... அந்த வீடியோக்கள், போட்டோக்களை ஆன்லைனில் வெளியிட்டனர்... ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் இப்படி ஒரு பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

என்ன நடந்தது அந்த இளம்பெண்ணிற்கு?தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள செட்டி பள்ளியை சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். ஐதராபாதில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் கடந்த 2009ஆம் ஆண்டு அவர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கொண்டா ரெட்டி ரமேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தன்னுடைய கணவரின் தந்தை, சகோதரர், சகோதரி, தாய் ஆகியோர் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார்.அப்போது கணவர் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பலமுறை பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அந்த பெண்.

2010 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த அந்த பெண் கல்வியை மீண்டும் தொடர்வதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சிலருடைய அறிமுகம் தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக சீரழித்து விட்டதாக கூறியுள்ளார்.

இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சுமன், ஆஞ்சநேயலு, பாலு, ஜிம் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளார்.

சென்னையை சேர்ந்த சதீஷ், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், முகேஷ் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநில முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோசஷ் ராவ், பெங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் ஆகியோரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் அவர்கள் ஒரு அறையில் அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இளம் பெண் கூறியுள்ளார்.

கத்தியை காண்பித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம், ஆசிட் வீசிவிடுவோம் என பலவகையில் மிரட்டி தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மிரட்டி நிர்வாண செல்பி வீடியோவை தன்னையே எடுக்க வைத்தாகவும் அந்த புகாரில் இளம்பெண் கூறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள், வீடியோக்களை அவர்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் வரவழைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக சந்தோஷ்ராவ், ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் மீது புகார் கூறியுள்ளார்.

இதுபோல் 143 பேர் கடந்த பத்தாண்டுகளில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக பஞ்சகுட்டா காவல்நிலையத்தில் அளித்த புகாரில் அந்த பெண் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாண போட்டோக்கள், பத்துக்கும் மேற்பட்ட நிர்வாண செல்பி வீடியோக்கள் ஆகியவற்றை பதிவு செய்து அவர்கள் ஆன்லைனிலும் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அப்படி வெளியிடப்பட்ட வீடியோக்கள் ஆன்லைனில் இருப்பதாகல் தன்னால் முகத்தை வெளியில் காட்ட முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது நிலைமையை அறிந்த ஐதராபாத்தை சேர்ந்த காட்பவர் பவுண்டேஷன் நிர்வாகிகள் தைரியம் அளித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அழைத்து வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் எப்படியும் கொலை செய்து விடுவார்கள் என்றும், தனது உடலை காட்பவர் பவுண்டேஷன் இடம் ஒப்படைத்து விடுங்கள் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தன்னைப்போல் மேலும் இரண்டு பெண்களை அடைத்து வைத்து 8 ஆண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.

மேலும் தன்னை அடித்து மிரட்டி சிலருக்கு போன் செய்து பணம் கேட்க சந்தோஷ்ராவ், ஸ்ரீநாத் சொன்னதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பணம் வந்தவுடன் அந்த பணத்தை அவர்களே எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி காவல் நிலையம், மகளிர் நல அமைப்புகள் ஆகியவற்றில் புகார் செய்வேன் என்று அவர்களிடம் கூறியபோது, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் புகாரின் அடிப்படையில் 42 பக்கங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீசார், தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியவர்கள், அந்த பெண் புகாரளித்த சிலரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்தாண்டுகளில் 143 பேர் தன்னை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக அந்த இளம்பெண் அளித்துள்ள புகார் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading