பஞ்சரான பைக்... உதவ முன்வந்த இருவர்...! பெண் மருத்துவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

பஞ்சரான பைக்... உதவ முன்வந்த இருவர்...! பெண் மருத்துவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு
பிரியங்கா ரெட்டி
  • News18
  • Last Updated: November 29, 2019, 11:29 AM IST
  • Share this:
பைக் பழுது காரணமாக சாலையில் நின்றுகொண்டிருக்கிறேன் என்று கடைசியாக வீட்டுக்கு தகவல் கூறிய பெண்ணை, மறுநாள் எரிந்த நிலையில் சடலமாகத்தான் குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா அன்று மாலை கால்நடை ஒன்றுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டு தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.


இரவு 9 மணி வரை பிரியங்கா வீடு விரும்பவில்லை. சற்று நேரத்தில் தன்னுடைய தங்கை பவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, மொபட் கீழே விழுந்து ரிப்பேர் ஆகிவிட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி டிரைவர்களை தவிர யாரையும் காணவில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை சரியாக இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது. சற்று நேரத்தில் மீண்டும் பேசுகிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

அதன்பின் பிரியங்கா வீடு திரும்பவில்லை. பிரியங்கா வீடு திரும்பாதது பற்றியும், தொலைபேசியில் அவர் கூறிய விஷயங்களையும் அவருடைய குடும்பத்தார் மாதாப்பூர் காவல் நிலையத்தில் கூறி புகார் அளித்தனர்.

வேலை விஷயமாக வெளியில் சென்று வீடு திரும்பாத டாக்டர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை ரங்காரெட்டியில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடக்கிறது என்று சாய் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பிரியங்கா குடும்பத்தாரை வரவழைத்து அந்த உடலை காண்பித்தனர். பிரியங்கா குடும்பத்தார் அது பிரியங்கா என்று உறுதி செய்தனர்.

எனவே பிரியங்காவை யாரோ உயிருடனோ அல்லது கொலை செய்து எரித்து விட்டதாக வழக்குப்பதிவு செய்த சாய் நகர் போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 4 தனிப்படைகளை அமைத்து பிரியங்காவை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், அந்த பெண்ணின் இருசக்கர வாகனம் கேட்பாரற்று கிடந்துள்ளது. ஆனால் அதில் நம்பர் பிளேட் இல்லை. அதேபோன்று பெண்ணின் செல்போன், பர்ஸ் ஆகியவற்றையும் காணவில்லை.

பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பது பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.

பிரியங்கா கொல்லப்பட்டது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு பெண் ஆதரவற்று சாலையில் நிற்கும் போது, அவருக்கு இதுதான் கதியா? என்று பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

#JusticeForPriyankaReddy என்ற ஹேஷ்டேக்கும் நேற்று இரவு முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்