ஹோம் /நியூஸ் /இந்தியா /

திடீரென பாய்ந்த நாய்.. 3வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர் பரிதாப பலி! தெலங்கானாவில் சம்பவம்!

திடீரென பாய்ந்த நாய்.. 3வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர் பரிதாப பலி! தெலங்கானாவில் சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

டெலிவரி செய்யவதற்காக வீட்டின் கதவை தட்டிய ரிஸ்வான் மீது அங்கிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் பாய்ந்து தாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் வளர்ப்பு நாயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்த 23 வயது ஸ்விக்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் யூசுப்குட்டா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான். 23 வயதான ரிஸ்வான் கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்விக்கி டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கே சோபனா என்பவருக்கு ரிஸ்வான் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். சோபனா 3ஆவது மாடியில் வசித்து வரும் நிலையிவ், ரிஸ்வான் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்ததும் வீட்டுக்குள் இருந்த ஜெர்மன் ஷெபர்ட் ரக நாய் ஒன்று ரிஸ்வான் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியுள்ளது.

அதிர்ந்து போன ரிஸ்வான் நாயிடம் இருந்து தப்ப முயன்று ஓடியுள்ளார். நாய் தொடர்ந்து துரத்தவே தப்பிக்க வேறு வழி தெரியாமல் 3ஆவது மாடியில் இருந்து துரத்தியுள்ளார்.இதில் ரிஸ்வானுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத் NIMS மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரிஸ்வன் அனுமதிக்கப்பட்டார்.

4 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரிஸ்வானின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் நாய்யின் உரிமையாளர் மீது இபிகோ 304(A) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Dog, Hyderabad, Pet Animal, Swiggy