புதுச்சேரியில் நிலத்தடி நீர் குறித்து ஹைதராபாத் விஞ்ஞானிகள் ஆய்வு!

விவசாய நிலம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மானாவாரி பயிர்களின் பன்னாட்டு ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் அதன் இயக்குநர் ஸ்ரீநாத்  தலைமையில் புதுச்சேரி வந்தனர்.

  • Share this:
ஹைதராபாத்தைச் சேர்ந்த மானாவாரி பயிர்களின் பன்னாட்டு ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் அதன் இயக்குநர் ஸ்ரீநாத்  தலைமையில் புதுச்சேரி வந்தனர்.

அந்த மூன்று ஆய்வாளர்களும் புதுச்சேரி அரசின் வேளாண் துறை அதிகாரிகளுடன் கிராமப் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் குறித்தான ஆய்வை மேற்கொண்டனர். மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சந்தை புதுகுப்பம், சூரப்பட்டு, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சந்தை புதுகுப்பம் கிராமப் பகுதியில் செந்தில் என்ற விவசாயியின் விளைநிலங்களைப் பார்வையிட்ட விஞ்ஞானிகள் அங்கு தற்போது பயிரிடப்படும் தர்பூசணி அதற்கு தொழில்நுட்ப முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய பணியில் ஈடுபட்டிருந்தைப் பாராட்டினார்கள்.

நிலத்தடி நீர் குறைந்து வரும் நிலையில் அதற்கு மாற்று பயிர் என்ன செய்யலாம் என்பது குறித்தும், ஹைதராபாத்தில் மானாவாரி பயிர்களை இங்கும் பயிர் செய்ய ஏதுவாக இருக்குமா என்பது குறித்தும் அவர்கள் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்தினர்.

Also see:
Published by:Rizwan
First published: