தெலங்கானாவில் மூன்று ஆண்டுக்ளுக்கு முன்னர் நான்கு பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 2019- ஆம் ஆண்டு நவம்பர் 27- ஆம் தேதியன்று ஐதராபாத் சுங்கச்சாவடி அருகே பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 பேரால் எரித்துகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முகமது, ஜோலு சிவா, ஜோலு நவீன் மற்றும் சிந்தகுன்டா சேனகேவலு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியே சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்ததாகவும் உடலை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் போது தான் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது என பகீர் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அதேபகுதியில் நடித்துக்காட்டும் படி அவர்கள் 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் தப்பி செல்ல முயன்றதாக கூறி போலீசார் 4 பேரையும் என்கவுன்ட்டர் செய்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் என்கவுன்டருக்கு ஆதரவாக பல பிரபலங்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Also Read: 218 கிலோ ஹெராயின்.. ரூ.1,526 கோடி மதிப்பு.. லட்சத்தீவு பகுதியில் பறிமுதல்.. குமரி மீனவர்கள் உட்பட 20பேர் அதிரடியாக கைது
சில சமூக செயற்பாட்டாளர்கள் எண்கவுன்ட்டருக்கு எதிரான கருத்துக்களை கூறியதால். நாடு முழுவதும் இச்சம்பவம் பேசு பொருளாக மாறியது. என்கவுன்ட்டர் நடைபெற்ற சூழல் குறித்து உண்மை தகவல்களை கண்டறிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்கவுன்ட்டர் குறித்து மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த அக்குழு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தெலங்கானாவின் ஹைதராபாத் போலீசார் மரணம் விளைவிக்க திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்ததாக கூறியுள்ளது. மரணம் ஏற்படும் என்று தெரிந்தே, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
குற்றத்தில் ஈடுப்பட்ட நான்கு பேரில் மூவர் சிறார்கள் என்றும் சிர்புர்கார் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. ஆனால் மூவரும் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று தெலங்கானா போலீசார் தெரிவித்திருந்தனர். என்கவுன்ட்டரில் ஈடுபட்ட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, வெளியிட்ட தலைமை நீதிபதி என்வி ரமணா, மேல் விசாரணை நடத்தும் படி தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.