• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாகன சோதனையில் வாட்ஸ் அப் சாட்களை செக் செய்யும் போலீசார் - இது சரியா?

வாகன சோதனையில் வாட்ஸ் அப் சாட்களை செக் செய்யும் போலீசார் - இது சரியா?

Hyderabad police

Hyderabad police

ஒருவரின் மொபைலை சாட்சிக்காக வாங்கும் போது பஞ்னாமாவை முன்கூட்டியே தர வேண்டும் என சாட்சி சட்டப் பிரிவு 65பி தெளிவாக கூறுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தற்போது போலீசார் பின்பற்றுவதில்லை.

  • Last Updated :
  • Share this:
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இளைஞர்களின் மொபைல் போன்களை வாங்கி அவர்களின் வாட்ஸ் அப் சாட்களை போலீசார் பரிசோதனை செய்த போலீசார் குறித்து வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஹைதராபாத்தில் கடந்த வியாழன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் குழு ஒன்று போதைப் பொருட்கள் சோதனை என்ற பெயரில், சில இளைஞர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் வாட்ஸ் அப் சாட்களை சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பைக்கில் வந்த 4 முதல் 5 பேரை தடுத்து நிறுத்தி அவர்களின் லக்கேஜ் பகுதியை திறந்து காட்டச் சொல்கின்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளிலும் போலீசார் சோதனையிடுவதை பார்க்க முடிந்தது. ஒரு படி மேலே சென்ற போலீசார் அந்த வாலிபர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை வாங்கி அவர்களின் வாட்ஸ் அப் சாட்களையும் படித்துப் பார்த்து சோதனை செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை மங்கல்ஹத், போய்குடா, தூள்பேட் மற்றும் ஜுமேரத் பஜார் போன்ற பகுதிகளில் நடந்தது.

இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசாரின் செயலால் அதிருப்தி அடைந்த நெட்டிசன்கள் தங்களின் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

Also read: கீழ்த்தரமான அரசியல்.. கணவருக்கு நீதி வேண்டி NCB அதிகாரியின் மனைவி மகாராஷ்டிர முதல்வருக்கு உருக்கமான கடிதம்!

சமூக செயற்பாட்டாளரான மசூத் இது குறித்து கூறுகையில், ஏழ்மை நிலை அல்லது பின் தங்கிய பகுதியைச் சேர்ந்தவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் ஊடுருவும் போலீசாரின் வழக்கமான செயல் தான். போலீசார் இது போல பஞ்சாரா ஹில்ஸ் அல்லது ஹைடெக் சிட்டி போன்ற உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் நடக்காது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலாக்நுமா பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் டெய்லர் கடை, பிரிண்டிங் பிரஸ் போன்றவற்றின் வணிக உரிமங்களை கேட்டனர். மேலும் ஒருவரிடம் ஆதார் அட்டையை வாங்கி பார்த்து ஏன் அப்போது தாடி இல்லை, இப்போது ஏன் தாடி வைத்திருக்கின்றாய் என கேட்டனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Also read: மது, குட்கா போல போதை பொருட்களை வரி செலுத்தி மக்கள் பயன்படுத்த அனுமதி தேவை – காங்கிரஸ் எம்.பி யோசனை

ஒருவரின் மொபைலை சாட்சிக்காக வாங்கும் போது பஞ்னாமாவை முன்கூட்டியே தர வேண்டும் என சாட்சி சட்டப் பிரிவு 65பி தெளிவாக கூறுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தற்போது போலீசார் பின்பற்றுவதில்லை. சாலையில் செல்வோரை கிரிமினல்களாக பார்க்கின்றனர். இது போல செய்ய சட்டத்தில் இடமில்லை” இவ்வாறு மசூத் தெரிவித்தார்.

டிஜிட்டல் தளத்தில் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை காப்பதற்காக பணியாற்றி வரும் SFLC அமைப்பின் சட்ட இயக்குனர் பிரசாந்த் சுகந்தன் கூறுகையில், “மொபைல் போனில் போட்டோக்கள், நிதி தகவல்கள், சாட்கள் என ஏராளமான தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். போலீசார் உரிய வாரண்ட் இல்லாமல் இதை சோதனை செய்ய முடியாது. அப்படி செய்வது தனிநபரின் தனியுரிமைக்கான உரிமை மீறல். யாரேனும் குறிப்பிட்ட குற்ற நிகழ்விடங்களில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள் என்றால் அவர்களிடம் சோதனை செய்வதற்கு உரிமை உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: