ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில்களில் பெண்கள் பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி!

ரயில்களில் பெண்கள் பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி!

ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் ரயிலில் பெண்கள் பெப்பர் ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை பெண் மருத்துவர் ப்ரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை அடுத்து பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்பீரே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் பெப்பர் ஸ்பீரே எடுத்துச் செல்ல தெலங்கானா ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Women safety