ஆம்லெட் விலை ₹60 ஆ? மதுக்கடை ஊழியரிடம் வாக்குவாதம் - அடிதடி.. கொல்லப்பட்ட இளைஞர்..

ஆம்லெட்

ஆம்லெட்டுக்காக 60 ரூபாயை செலுத்துமாறு மதுபானக் கடை ஊழியர் கேட்டபோது ஆம்லெட்டின் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
ஆம்லெட் விலை காரணமாக மதுக்கடை ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியாக கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கு இதுவெல்லாம் ஒரு காரணமா என நினைக்கத் தோன்றுகிறதல்லவா? சிறிய தீப்பொறி தான் பல லட்சம் உயிர்களை காவு வாங்கிவிடும் காட்டுத்தீக்கே அஸ்திவாரமாக அமைகிறது. சிறிய சிறிய விஷயங்களால் பெரிய விபரீதங்கள் அரங்கேறி விடுவதுண்டு.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் சோடா கடைக்காரர் தர வேண்டிய ஒரு ரூபாய் பாக்கிக்காக அவருக்கும், கடைக்காரருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அந்தக் கடையையே மாதவன் சூறையாடுவார். அதன்பின்னர் வேறு வழியில்லாமல் கடைக்காரர் தான் தரவேண்டிய அந்த ஒரு ரூபாயை மாதவனிடமே திருப்பி அளிப்பார்.

இதை போன்றே ஒரு சம்பவம் தான் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத்தின் Langer Houz பகுதியைச் சேர்ந்த 34 வயதான விகாஸ் என்ற இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். விகாஸ் தனது நண்பர் பப்லுவை நேற்று சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் இணைந்து உப்பல் பகுதியில் உள்ள மஹன்காலி எனும் மதுபானக்கடைக்கு மது அருந்த சென்றனர்.

இருவரும் தனி அறை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது விகாஸ், சைட் டிஷ்ஷாக ஆம்லெட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதன் பின்னர் ஆம்லெட்டுக்காக 60 ரூபாயை செலுத்துமாறு மதுபானக் கடை ஊழியர் கேட்டபோது ஆம்லெட்டின் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி விகாஸ் மற்றும் அவரின் நண்பர் பப்லுவுக்கும் பார் ஊழியர்களுக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.

கடுமையாக தாக்கப்பட்ட விகாஸை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சையின் போது இளைஞர் விகாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்..

ஆம்லெட்டுக்காக ஏற்பட்ட தகறாரும் அதன் காரணமாக இளைஞர் உயிரிழந்ததும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published by:Arun
First published: