உங்கள் சிறுநீரகத்தில் கல் இருந்தால் வாழும் வாழ்க்கை நரகம் போல மாறிவிடும். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் சமீபத்தில் சிறுநீரகக் கற்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். சுமார் 6 மாத காலம் சிறுநீரக கல் காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள நால்கொண்டா பகுதியைச் சேர்ந்த வீரமல்லா ராமலெட்சுமையா என்பவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கற்கள் காரணமாக இடது பக்கம் தீராத வலி இருந்து வந்தது. அருகாமையில் உள்ள மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், வலி எந்த வகையிலும் தீரவில்லை. கட்டுப்படுத்த முடியாத வலி காரணமாக ராமலெட்சுமையாவின் அன்றாட வாழ்க்கை பாதித்து வந்தது. எந்த ஒரு வேலையையும் அவரால் முறையாக செய்ய முடியவில்லை.
வெயில் காலத்தில் கூடுதல் அவதி
ஏற்கனவே சிறுநீரகத்தில் கற்கள் இருந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் கோடை வெப்பம் காரணமாக ராமலெட்சுமையாவின் வலி இன்னும் அதிகமானது. இதைத் தொடர்ந்து, பல்நோக்கு சிகிச்சை அளிக்கும் பெரிய மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு அவரது மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்த மருத்துவர்கள், தொடர்ந்து உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், சிறுநீரகத்தில் ஏராளமான கற்கள் இருப்பது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை மூலமாக அகற்றம்
மருத்துவமனையில் ராமலெட்சுமையாவுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில், அவரது சிறுநீரகத்தில் இருந்து 206 கற்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து, மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் துறை நிபுணர், மருத்துவர். பூலா நவீன் குமார் கூறுகையில், “ராமலெட்சுமையாவுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் மற்றும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவற்றில், அவரது சிறுநீரகத்தில் ஏராளமான கற்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிடி கப் ஸ்கேன் செய்து, அது உறுதி செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை மூலமாக அனைத்து கற்களும் அகற்றப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.
சிறுநீரகக் கற்களுக்கு காரணம் என்ன?
கோடை வெப்பம் நாளுக்கு, நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், உடலுக்கு போதுமான நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதன் காரணமாக சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெயில் காலத்தில் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து வழங்கிடும் வகையில் அவ்வபோது சிறுக, சிறுக தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Also see... Viral Video - தலித் சாமியாருக்கு உணவு ஊட்டி அந்த எச்சிலை வாங்கி உண்ட எம்எல்ஏ
இளநீர், நுங்கு, எலுமிச்சை சாறு, மோர் உள்ளிட்ட இயற்கையான குளிர்பானங்களை அருந்தாலும் என்றும், ஆர்டிஃபிஷியல் சர்க்கரை சேர்க்கப்பட்ட செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hyderabad, Kidney Stone