Home /News /national /

கலப்பு திருமண செய்த இளைஞர் ஆணவ படுகொலை - நீதி கேட்டு பாஜக போராட்டம்

கலப்பு திருமண செய்த இளைஞர் ஆணவ படுகொலை - நீதி கேட்டு பாஜக போராட்டம்

ஹைதராபாத்தில் ஆணவ படுகொலை

ஹைதராபாத்தில் ஆணவ படுகொலை

மாற்று மதப் பெண்ணை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்த நபர் பொதுவெளியில் படுகொலை செய்யப்பட்டார்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மதம் மாறி திருமணம் செய்துகொண்டதன் காரணமாக இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகரஜூ. இவர் மலக்பேட் பகுதியில் கார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணியாற்றிவந்தார்.

    இவரும் அஸ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். கல்லூரி காலத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த பெண் இந்துவாக மதம் மாறி, பல்லவி என பெயரை மாற்றிகொண்டுள்ளார். அத்துடன், இருவருக்கும் இந்து முறைப்படியே திருமணம் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று இரவு 9 மணி அளவில் நாகராஜூ படுகொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் வந்த நபர் இவரை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அருகே இருந்தவர்கள் சடலத்தை புகைப்படம் எடுத்துள்ள நிலையில், சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் நாகராஜுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்த நாகராஜுவின் உறவினர், இது பெண் வீட்டினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆவண படுகொலை எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. இந்த விவகாரத்தை தெலங்கானா பாஜகவும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறியதாவது, "இந்த விவகாரத்தின் பின்னணியில் பெண்ணின் குடும்பத்தினர் மட்டும்தான் உள்ளனரா, அல்லது இவர்களுக்கு ஏதேனும் மத குழுக்கள் ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றனரா என விசாரிக்க வேண்டும். முழு விசாரணை செய்து முழு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்றார்.

    இதையும் கைது: ஹரியானாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிப்பொருள்களுடன் கைது

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை, முக்கிய குற்றவாளி மற்றும் பெண்ணின் உறவினர்களில் சந்தேகத்திற்குரிய சிலரையும் கைது செய்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Honor killing

    அடுத்த செய்தி