ஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு

சாலை விபத்து- 6 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மற்றும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 • Share this:
  ஹைதராபாத் அருகே ஷம்சாபாத் எல்லைப்பகுதியில் கூலித்தொழிலாளர்கள் 30 பேரை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்ற கார் மீது லாரி மோதிய வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் ஆறு பேர், வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

  இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு வாகனங்களும் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்ததாக ஷம்ஷாபாத் துணை போலீஸ் கமிஷனர் என் பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 30 சக ஊழியர்களுடன், ஷம்ஷாபாத்தில் இருந்து காய்கறிகளை வாங்கி சுல்தன்பள்ளிக்கு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் அவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பூர்வீகவாசிகள் என்றும் தெரிவித்தார். இவர்கள்  சுல்தன்பள்ளி கிராமத்தில் செங்கல் சூளைகளில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: