ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹைதராபாத்தில் மதகோஷங்களை சொல்ல சொல்லி அடித்து துன்புறுத்தப்பட்ட சட்ட மாணவர்!

ஹைதராபாத்தில் மதகோஷங்களை சொல்ல சொல்லி அடித்து துன்புறுத்தப்பட்ட சட்ட மாணவர்!

ஹைதராபாத் மாணவர்

ஹைதராபாத் மாணவர்

நாங்கள் அவரது சித்தாந்தத்தை சரிசெய்ய விரும்புகிறோம். அவர் கோமா ஆகும் வரை அடிப்போம். அவர் இந்த ஒரு புதிய அனுபவத்தை நினைவில் கொள்வார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hyderabad |

ஹைதராபாத் அருகே உள்ள விடுதி அறை ஒன்றில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு, மதக் கோஷங்களை பாடும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

ஹைதராபாத் தோந்தன பள்ளி கிராமத்தில் உள்ள உயர்கல்விக்கான ICFAI அறக்கட்டளையில் (IFHE) முதலாம் ஆண்டு மாணவரான ஹிமாங்க் பன்சாலை அறைந்து, உதைத்து, அவரை "ஜெய் மாதா தி" மற்றும் "அல்லாஹு அக்பர்" என்ற கோஷங்களை சொல்ல வைத்துள்ளனர்.

ஹிமாங்க் சமூக ஊடகங்களில் நபிக்கு எதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து நவம்பர் 1 அன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் தன்னை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், தனது கால்சட்டையை கழற்றாவிட்டால் அடித்துக் கொன்று விடுவதாக மாணவர்கள் மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். ஹிமாங்க், தெலுங்கானா அமைச்சர் கேடி ராமராவ் மற்றும் சைதராபாத் போலீஸ் கமிஷனரை டேக் செய்து, இந்த சம்பவத்தை ட்வீட் செய்தார்.

அந்த வீடியோவில் "நாங்கள் அவரது சித்தாந்தத்தை சரிசெய்ய விரும்புகிறோம். அவர் கோமா ஆகும் வரை அடிப்போம். அவர் இந்த ஒரு புதிய அனுபவத்தை நினைவில் கொள்வார்" என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறினார். அவர்களில் ஒருவர் தனது பணப்பையை பறித்துக்கொண்டு மற்றொருவரிடம், "உனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்த ஊருக்குள்ள குழந்தை பிறக்கவே கூடாது.. பெண்கள் பிரசவிக்க தடை விதித்த கிராமம்.. 400 ஆண்டுகால நம்பிக்கை!

கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 12 மாணவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஏழு பேர் தப்பியோடி விட்டனர். அவர்கள் அனைவரையும் வணிக பள்ளி இடைநீக்கம் செய்துள்ளது. அதோடு வணிகப் பள்ளி, ஒரு அறிக்கையில், "இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களுக்கு ஒரு போதும் துணை போக மாட்டோம். அவர்களது செயலுக்கு அவர்களை இடைநீக்கம் செய்கிறோம்” என்று செய்து வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்காத கே சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசைக் கண்டித்தும் ,"இது இங்கு மதத்தைப் பற்றியது அல்ல. இது போன்ற ஆத்திரமூட்டும் சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போவது போலி மதச்சார்பின்மை" என்று பாஜக தலைவர் ரச்சனா ரெட்டி, செய்தி நிறுவனமான ANI அளித்த பேட்டியில் கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Hyderabad, Student