கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் கூறிய கல்லூரி மாணவி தற்கொலை

கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் கூறிய கல்லூரி மாணவி தற்கொலை

கோப்புப்படம்

ஹைதராபாத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் கூறிய கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

 • Share this:
  தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி பிப்ரவரி 11-ம் தேதி மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது ஆர்.எல்.நகர் காலணிக்கு செல்ல 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் ஏறிய போது 6 பேர் கொண்ட கும்பல் தன்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வீட்டில் கூறியுள்ளார். அதனையடுத்து, அவருடயை பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

  அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. கல்லூரியிலிருந்து வீடு திரும்புவதற்கு தாமதமான நிலையில் வீட்டில் பொய் கூறியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

  இந்த நிலையில், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்து ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்தியில், ‘அந்தப் பெண் மயக்கமான நிலையில் பார்த்த அவருடைய பெற்றோர் காட்கேசர் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துவிட்டாரா? அல்லது சிகிச்சையின் போது உயிரிழந்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக மருத்துவமனைக்குச் சென்று காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: