ஹோம் /நியூஸ் /இந்தியா /

’உணவுக் கலையின் நகரம்’... இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம்!

’உணவுக் கலையின் நகரம்’... இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம்!

பிரியாணி

பிரியாணி

முகலாய ஸ்டைல் சமையலுக்கு மக்கள் அதிகம் முக்கியத்துவம் கிடைத்து வருவது அக்கலைக்குக் கிடைத்து கவுரவம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஹைதராபாத் நகரத்துக்கு ‘உணவுக் கலையின் நகரம்’ என்ற சிறப்புப் பட்டத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.

ஹைதரபாத் நகருக்கு இப்படியொரு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதை இந்திய உணவுப் பிரியர்கள், சமையல் கலை வல்லுநர்கள் என அனைவரும் ஒருசேர வரவேற்றுள்ளனர். உலகப் பிரசித்திப் பெற்ற ஹைதராபாத் பிரியாணி, ஹலீம், நிஹாரி என அத்தனை உணவு ரகங்களுமே ’டாப் க்ளாஸ்’ பட்டியலைச் சார்ந்தவை.

மெயின் டிஷ் உணவுகளுக்கு மட்டுமல்லாமல், குருமா, தயிர் ஊற்றி செய்யப்படும் கறி, சூக்கா மட்டன் என ஹைதராபாத்தில் சமைக்கப்படும் அத்தனை உணவுகளுக்கும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முகலாயர்கள் மற்றிம் நிஜாம் மன்னர்களின் பாரம்பரியமே இந்த நகருக்கு உணவுக் கலையின் நகரம் என்ற பட்டம் கிடைக்கக் காரணம் அமைந்ததாக உணவுப் பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இன்றும் முகலாய ஸ்டைல் சமையலுக்கு மக்கள் அதிகம் முக்கியத்துவம் கிடைத்து வருவது அக்கலைக்குக் கிடைத்து கவுரவம் என்கிறனர் ஹைதரபாத் சமையல் கலைஞர்கள்.

மேலும் பார்க்க: ‘சந்திரயான் 2’ முடிவல்ல... மீண்டும் முயற்சிப்போம்...! இஸ்ரோ தலைவர் சிவன்

தமிழ்நாடு உருவான கதை!

Published by:Rahini M
First published:

Tags: Biriyani