Home /News /national /

நள்ளிரவு பார்ட்டியில் கொகைன்.. நடிகை உட்பட சிக்கிய 38 விஐபி பிள்ளைகள்

நள்ளிரவு பார்ட்டியில் கொகைன்.. நடிகை உட்பட சிக்கிய 38 விஐபி பிள்ளைகள்

நள்ளிரவு பார்ட்டியில் கொகைன்.. நடிகை உட்பட சிக்கிய 38 விஐபி பிள்ளைகள்

நள்ளிரவு பார்ட்டியில் கொகைன்.. நடிகை உட்பட சிக்கிய 38 விஐபி பிள்ளைகள்

ஹைதராபாத் நட்சத்திர விடுதியில் விடிய விடிய நடைபெற்ற போதைப் பார்ட்டியில் தெலுங்கு திரைப் பிரபலங்களின் பிள்ளைகள் உட்பட 148 பேர் சிக்கியுள்ளனர்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் மது விருந்து நடைபெற்றது. அம்மாநிலத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நள்ளிரவு தாண்டியும் கேளிக்கை நிகழ்ச்சிகள் தொடர்ந்ததால், தகவல் அறிந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 48 இளம் பெண்கள் உட்பட 148 பேர் மது விருந்தில் கலந்து கொண்டிருப்பது தெரியவந்தது. நட்சத்திர விடுதிக்குள் போலீசார் நடத்திய சோதனையில் வெள்ளை நிற பவுடர்களுடன் கூடிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பரிசோதித்து பார்த்த போது கொகைன் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 48 இளம் பெண்கள் உட்பட 148 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பார்டிக்கு வந்தவர்களுக்கு பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்த போதை பார்ட்டியில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், திரைப்பட நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா, பாடகர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திர மாநில முன்னாள் டிஜிபி கௌதம் சவாங்கின் மகள், தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கல்லா ஜெயதேவின் மகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 38 வி.ஐ.பி.க்களின் பிள்ளைகள் போதை விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் போலீஸ் பிடியில் சிக்கிய பிரபலங்களின் வாரிசுகள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்றும் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிஹாரிகா கைது தொடர்பாக அவர் தந்தை நாகபாபு வெளியிட்ட வீடியோவில், போதைப்பொருள் பயன்படுத்திய இடத்தில் என் மகள் இருந்திருக்கிறார் என்றும், ஆனால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதை காவல்துறையினர் உறுதிசெய்திருப்பதாகவும் கூறியுள்ளார். தேவையில்லாத வதந்தியைப் பரப்பவேண்டாம் என்றும் அந்த வீடியோவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Also Read : ஹிஜாப், ஹலால் இறைச்சி சர்ச்சையை அடுத்து ஸ்பீக்கர் பிரச்னையை கையில் எடுத்த கர்நாடகா

    போதை பார்ட்டி தொடர்பாக நட்சத்திர விடுதியின் மேலாளர்கள் அனில்குமார், அபிஷேக் உட்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் காவல் ஆய்வாளர் சிவச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீண்டும் அழைக்கும் போது ஆஜராக வேண்டும் எனக் கூறி போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவு போதை விருந்தில் தெலுங்கு விஜபிக்களின் பிள்ளைகள் சிக்கியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime News

    அடுத்த செய்தி