ஹோம் /நியூஸ் /இந்தியா /

3 வயது சிறுமிக்கு இருந்த 'சிரிப்பு கோளாறு' - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

3 வயது சிறுமிக்கு இருந்த 'சிரிப்பு கோளாறு' - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

Laughter Disorder மிகவும் அரிதானவை என்றும் 2,00,000 குழந்தைகளில் ஒருவர் மட்டுமே இந்த கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன

Laughter Disorder மிகவும் அரிதானவை என்றும் 2,00,000 குழந்தைகளில் ஒருவர் மட்டுமே இந்த கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன

Laughter Disorder மிகவும் அரிதானவை என்றும் 2,00,000 குழந்தைகளில் ஒருவர் மட்டுமே இந்த கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன

  • 2 minute read
  • Last Updated :

ஜெலஸ்டிக் வலிப்பு (gelastic seizure) தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு ஹைதராபாத் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்த அரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமிக்கு இருந்த gelastic seizure கோளாறு வெளிப்படையான காரணம் அல்லது சூழ்நிலை இல்லாமல் திடீரென்று சிரிப்பை வரவழைக்கும் வித்தியாசமான கோளாறு ஆகும். இது சிரிப்பு கோளாறு (Laughter Disorder) என்றும் குறிப்பிடப்படும்.

இந்த கோளாறு உள்ள நபர் லேசாக புன்னகைப்பது போலவோ அல்லது நன்றாக சிரிப்பது போலவோ தோன்றலாம். பொதுவாக குழந்தைப் பருவத்தில் புதிதாகப் பிறந்த காலத்தில் கூட gelastic seizure இருக்கும். மேலும் இந்த வகை வலிப்பின் விளைவாக குழந்தைகள் அடிக்கடி காரணமேயின்றி சிரிக்கும். இந்த கோளாறு மிகவும் அரிதானவை என்றும் ஒவ்வொரு 200,000 குழந்தைகளில் ஒருவர் மட்டுமே இந்த கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன. ஆப்ரேஷன் செய்யப்பட்ட குழந்தையின் பெயர் கிரேஸ்.

குழந்தையின் பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கு சென்றும் தீர்வு கிடைக்காத நிலையில், LB நகரில் உள்ள காமினேனி ஹாஸ்பிடலை அணுகினர். தொடர்ந்து குழந்தைக்கு அசாதாரண சிரிப்பு இருந்த போது பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் சிறுமிக்கு ஜெலஸ்டிக் வலிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிறுமிக்கு மூளையின் ஒரு பகுதியான ஹைபோதாலமஸ் என்ற பகுதியில் சிறிய புண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமிக்கு இருந்த கோளாறு பற்றி கூறி இருக்கும் மருத்துவர்கள், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு இந்த குழந்தைக்கு மாதத்திற்கு 1 முறை வலிப்பு வந்தது, அது 10 வினாடிகள் நீடித்தது.

ஆனால் சமீபத்தில் இந்த நிலை தீவிரமாகி ஒரு நாளைக்கு 5-6 முறை வலிப்பு ஏற்பட்டு அதுசுமார் ஒரு நிமிடம் வரை நீடித்தது. இதனிடையே Kamineni Hospital-ஐ சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர், குழந்தை மருத்துவர் மற்றும் உட்சுரப்பியல் நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு குறிப்பிட்ட சிறுமியை தீவிரமாக பரிசோதனை மற்றும் மதிப்பீடு செய்தது.

அப்போது சிறுமி ஹைஎண்ட் 3T MRI-ல் இமேஜிங்கிற்கு உட்படுத்தப்பட்டார். ஹைபோதாலமஸிலிருந்து பெரிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் மீது அழுத்தி விரிவடைவதை அந்த MRI காட்டியது. குழந்தையின் நிலை, அரிதான நோய், அறுவை சிகிச்சையின் தேவை மற்றும் அதில் உள்ள ஆபத்து தேவையான சிகிச்சை முறைகள் குறித்து குழந்தையின் பெற்றோருக்கு விளக்கப்பட்டது. பெற்றோர் சம்மதித்ததை தொடர்ந்து மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கிரானியோட்டமி மற்றும் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பார்வை, கூடுதல் கண் அசைவுகள் மற்றும் நாளங்களுக்குப் பொறுப்பான பெரிய கட்டமைப்புகளுக்கு குறிப்பாக நரம்புகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மிக குறைந்த ஆக்கிரமிப்பு முறையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் வலிப்பு தாக்கங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக காமினேனி மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரமேஷ் கூறினார்.

ALSO READ |  ‘காணாமல் போனவர்’ விளம்பரத்தின் மூலம் ஷெர்வானியை பிரபலமாக்கிய சுல்தான் கடை!

தொடர்ந்து பேசிய மருத்துவர் ஹைபோதாலமிக் ஹமர்டோமாஸ் கொண்ட குழந்தைகள் பொதுவாக ஜெலஸ்டிக் வலிப்புகள், அறிவாற்றல் செயலிழப்பு, நடத்தை சீர்குலைவு ஆகியவற்றை கொண்டுள்ளனர். முன்கூட்டியே கண்டறிவது, சரியான நோயறிதல் மற்றும் மேலாண்மை ஆகியவை குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை பெற உதவும் என்றார்.

First published: