• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ.100 செலுத்தினால் 1000 ஆபாச வீடியோக்கள்.. டெலிகிராம் மூலம் அரங்கேறிய பிஸினஸ்!

ரூ.100 செலுத்தினால் 1000 ஆபாச வீடியோக்கள்.. டெலிகிராம் மூலம் அரங்கேறிய பிஸினஸ்!

Cyber Crime

Cyber Crime

கைது செய்யப்பட்டுள்ள மதுகர் ரெட்டி, ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்

  • Share this:
ஆபாச வீடியோக்கள் பார்க்கு பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர், அதனையே விற்பனை செய்து தொழிலாக செய்து வந்தது தெரியவந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.

சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தை ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுவதாக தெலங்கானா மாநில மகளிர் பாதுகாப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒருவர் டெலிகிராம் சமூக வலைத்தளத்தின் மூலம் குழந்தை ஆபாச வீடியோக்களை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குழந்தை ஆபாச வீடியோக்கள் விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க தெலங்கானா மகளிர் பாதுகாப்பு பிரிவினர் சிறப்பு காவல் குழு ஒன்றை உருவாக்கினர். சைபர் கண்காணிப்பு பிரிவின் உதவியுடன் இந்த விவகாரம் குறித்து விசாரித்ததில், கரிம் நகர் மாவட்டத்தின் நுஸ்துலபுர் எனும் பகுதியைச் சேர்ந்த வங்கல மதுகர் ரெட்டி என்ற 23 வயது இளைஞர் தான் இந்த தொழிலை நடத்தி வந்ததாக தெரியவந்தது.

இதனையடுத்து நுஸ்துலபுர் அருகேயுள்ள திம்மாபுர் பகுதிக்கு சென்ற போலீசார், இளைஞர் மதுகர் ரெட்டியை அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவருடைய மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுகர் ரெட்டி மீது எல்.எம்.டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read:   Mask Gun: அசத்தும் இந்திய ஆன்லைன் ஷூட்டர் கேம்.. புதிய சாதனை!

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள மதுகர் ரெட்டி, ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையானவர் என தெரிகிறது. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட நிறைய வீடியோக்கள் அவருடைய மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

மதுகர் ரெட்டி தனது நண்பர் ஒருவரின் மூலம் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி பேமெண்ட் கேட்வே ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அவருடைய அடையாளத்தை காட்டிக்கொள்ளாமல் அவரால் பணம் பெற முடியும். சமூக வலைத்தளமான டெலிகிராமில் ஒரு குரூப் உருவாக்கி இருக்கிறார். 100 ரூபாய் செலுத்தினால் 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பார்ப்பதற்கு அவர் வழிவகை செய்திருந்தார். கடந்த ஜூன் மாதம் முதல் டெலிகிராமில் இதற்கான லிங்குகளை அவர் ஷேர் செய்து வந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: