வேறுநபருடன் தொடர்பு... மனைவியின் கழுத்து அறுத்து காவல்நிலையம் சென்ற கணவர்

news18
Updated: September 12, 2018, 1:10 PM IST
வேறுநபருடன் தொடர்பு... மனைவியின் கழுத்து அறுத்து காவல்நிலையம் சென்ற கணவர்
news18
Updated: September 12, 2018, 1:10 PM IST
கர்நாடகாவில், வேறுநபருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்றசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகேயுள்ள அஜாம்புரா காவல் நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர் திடீரென்று தனது கையில் வைத்திருந்த பையை திறந்து, அதில், இருந்த துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை ஒன்றை காவலர்களிடம் காட்டவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதான் எனது காதல் மனைவியின் தலை என அவர் கூற, அவரை சமாதானப்படுத்திய போலீஸார் தலையை பைக்குள் போடுமாறு கூறி நடந்ததை பதிவு செய்தனர்.

நடந்தது என்ன?

அஜாம்புரா காவல் நிலையத்துக்குட்பட்ட நீலகிரி தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். வாடகை கார் ஓட்டுநரான சதீஷின் மனைவி ரூபாவுக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுனிலுக்கு, மூன்று லட்ச ரூபாயை சதீஷுக்கு தெரியாமல் ரூபா கடனாக பெற்றுத்தந்துள்ளார். இருவருக்கும் இடையேயான தொடர்பை சதீஷ் கண்டித்து வந்துள்ளார். எனினும், அவர்கள் தொடர்பு நீடிக்கவே ஆத்திரமடைந்த சதீஷ், சுனிலுடன் இருந்தபோது ரூபாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

சதீஷ் போலீஸிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சுனிலையும் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால், அவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்தார். சதீஷ் ரூபா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது அந்த குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...