காதல் மனைவியை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. நடந்தது என்ன? (வீடியோ)

பெற்றோருக்கு தெரியாமல் கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காதல் கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். காதல் மனைவியை இளைஞர் கொன்றது ஏன்?

  • Share this:


விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை மாணவி ஆறு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.

ரகசியமாக செய்து கொண்ட திருமண உறவை திவ்யா முறித்து கொண்டதாக கருதி, அவர் வீட்டுக்கு சென்று சின்னசாமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தான் வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவை சின்னசாமி குத்தியுள்ளார். பின்னர் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை முயற்சியிலும் சின்னசாமி ஈடுபட்டார்.


இரண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். சின்னசாமி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

மேலும் படிக்க.. திருமணமாகி 31 நாட்களில் விமானப் பணிப்பெண் தற்கொலை.. என்ன நடந்தது?

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக்காதல் விவகாரத்தில் கத்தியால் சின்னசாமி குத்திக்கொன்றுவிட்டதாக பெண் வீட்டார் தெரிவித்தனர்.ஆனால், ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துவிட்டதாகவும், பெண் வீட்டில் சம்மதிக்காததால் ஏற்பட்ட தகராறில் சின்னசாமி கொலை செய்யும் அளவுக்கு வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 

மேலும் திருமணம் நடந்ததற்கான புதைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இது குறித்து விஜயவாடா போலீசார் விரிவாக விசாரித்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading