நிபா வைரசால் இறந்த செவிலியரின் கணவர் வெள்ள நிவாரணத்துக்கு நிதி

நிபா வைரசால் இறந்த செவிலியரின் கணவர் வெள்ள நிவாரணத்துக்கு நிதி
செவிலியர் லினியின் குடும்பம் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: August 16, 2018, 4:20 PM IST
  • Share this:
நிபா வைரசால் இறந்த செவிலியரின் கணவர், தனது முதல் மாத சம்பளம் முழுவதையும் கேரள வெள்ள  நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். 

கடந்த மே மாதம் கேரளாவில் நிபா வைரஸ் பரவியது. அதில் 17 பேர் உயிரிழந்தனர். அப்போது நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி எனும் செவிலியருக்கும் வைரஸ் பரவியது. அதில், அவர் உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்,  அவர்  கடைசியாக தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து, கேரள அரசு லினியின் கணவர் சஜீசுக்கு அரசுப் பணி வழங்கியது. இந்நிலையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் கேரளாவில் எற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்தனர். பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்காக பல்வேறு தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.


இந்நிலையில் சஜீஸ் தனது முதல் மாத சம்பளம் முழுவதையும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
First published: August 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading