• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!

பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!

India vs Pakistan

India vs Pakistan

என்னுடைய மனைவி இந்திய வீரர்களை அவமதித்து ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதனை பார்த்த என்னுடன் பணியாற்றும் சக நண்பர்கள் நானும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பவோ என கருதினர்.

  • Share this:
இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், வாட்ஸ் அப்பில் இந்திய வீரர்களை தவறாக பதிவிட்டு ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் தன் இளம் மனைவி மீதே கணவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லீக் மோதலில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தானின் இந்த வெற்றியை இந்தியாவில் சிலர் கொண்டாடியதாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஆனால் தன் மனைவி மீதே கணவர் ஒருவர் இப்படியொரு புகாரை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவர் இஷான் மியான், இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி ரபியா சம்ஷி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக தனது மனைவியும், அவரின் உறவினர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், இந்திய வீரர்களை அவமதிக்கும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் கடந்த அக்டோபர் 29ம் தேதியன்று கஞ்ச் போலீஸ் நிலையத்தில் அவருடைய கணவர் இஷான் மியான் புகார் அளித்துள்ளார்.

Also read:  ஈராக் பிரதமரை கொல்ல முயற்சி…. ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்.. தேர்தல் முடிவு காரணமா?

ஆனால் காவல்நிலையத்தில் இஷானில் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்யாததால் இஷான், தனது மனைவி வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களின் ஸ்கிரீன் ஷாட்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்று கடந்த நவம்பர் 4ம் தேதி புகார் அளித்தார். இதனையடுத்து தற்போது இஷானின் மனைவி ரபியா மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இஷான் கூறுகையில், டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தபோது கடந்த அக்டோபர் 24ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அன்றைய தினம் என்னுடைய மனைவி இந்திய வீரர்களை அவமதித்து ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதனை பார்த்த என்னுடன் பணியாற்றும் சக நண்பர்கள் நானும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பவோ என கருதினர். இதனால் எனக்கு அவமானம் ஏற்பட்டது. இதனையடுத்தே என் மனைவி மீது போலீசில் புகார் அளித்தேன், ஆனால் என்னுடைய புகாரை போலீசார் ஏற்காததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சென்று புகார் அளித்தேன் என்றார். ஆனால் என்னுடைய மொபைல் என் உறவினரிடம் இருந்தது, அவர் தான் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். இதற்கும் எனக்கும் தொடர்பில்லை என ரபியா விளக்கமளித்துள்ளார்.

Also read: பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு தீபாவளி நாளில் நேர்ந்த துயரம்!

இஷானுக்கும் அவருடைய மனைவி ரபியாவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரபியா தனது பெற்றோருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: