ஹோம் /நியூஸ் /இந்தியா /

கருவில் பெண் சிசு.. நாட்டு மருந்து என விஷத்தை கொடுத்து கர்ப்பிணியைக் கொன்ற கொடூர கணவன்!

கருவில் பெண் சிசு.. நாட்டு மருந்து என விஷத்தை கொடுத்து கர்ப்பிணியைக் கொன்ற கொடூர கணவன்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குழந்தையின் அடையாளத்தை தெரிவித்த மருத்துவமனை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  ஆந்திராவில் 2வது குழந்தையும் பெண் குழந்தை என்பதால் ஆறு மாத கர்ப்பிணியின் கருவை கலைக்க நாட்டு வைத்தியம் என்ற பெயரில் விஷம் கொடுத்து கொலை செய்த கணவன் மற்றும் மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையை சேர்ந்த வேணு - சிவரஞ்சனி தம்பதியினருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மீண்டும் சிவரஞ்சினி கர்ப்பம் தரித்துள்ளார்.

  ஆறு மாத கர்ப்பிணியான இவரை, நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவர் வேணு, வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்துள்ளார்.

  அதில் கருவில் இருப்பது பெண் குழந்தை தான் என கண்டறியப்பட்டதால் அதனை கலைக்க முடிவு செய்துள்ளார். பிறகு அவரது தாயுடன் சேர்ந்து மனைவிக்கு நாட்டு மருந்து என்ற பெயரில் பச்சிலைகளை அரைத்து கொடுத்துள்ளார்.

  இதையும் படிங்க | 'பைக்ல ஏறு'.. ஐஐடி மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை.. இளைஞர் கைது!

  இதனை குடித்த சிவரஞ்சினி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனை அறிந்த சிவரஞ்சினியின் பெற்றோர், வேணு மற்றும் அவரது தாயார் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

  இதன் அடிப்படையில், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கருவில் இருந்த குழந்தையின் அடையாளத்தை தெரிவித்த மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Andhra Pradesh, Crime News, Murder