• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எனக்கு கொரோனா இருக்குனு மனைவியை ஏமாற்றிய கணவர்.. வசமாக காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி?

எனக்கு கொரோனா இருக்குனு மனைவியை ஏமாற்றிய கணவர்.. வசமாக காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி?

மாதிரி படம்: கொரோனா மாஸ்க் அணிந்த காவல் அதிகாரி

மாதிரி படம்: கொரோனா மாஸ்க் அணிந்த காவல் அதிகாரி

தனியார் கொரோனா பரிசோதனை மையத்தில் இருந்து கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்த அந்த 26 வயது இளைஞர்.

  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் பல நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ள நிலையில், பலரும் வாழ்வாதாரம் இழந்து வாழ்க்கையை நடத்த சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதே கொரோனாவை சிலர் வேறு வகையில் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருவது அதிகரித்திருக்கிறது.

சிலர் அலுவலக வேலைகளிலிருந்து தப்பிப்பதற்காக தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக பொய் கூறி நீண்ட விடுமுறை வாங்கிக் கொள்கின்றனர். நிறுவனங்களுக்கும் தங்களின் பிற ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை கொடுத்து விடுகின்றனர். இதே போல ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் சிலரும் வகுப்புகளை கட் செய்கின்றனர்.

அட இதுவெல்லாம் பரவாயில்லையப்பா, ஆனால் மனைவியுடன் சேர்ந்து வாழுவதில் இருந்து தப்பிப்பதற்காக கூட ஒருவர் கொரோனாவை காரணம் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் வசமாக சிக்கிக்கொண்டிருப்பது தான் இங்கு ஹைலைட்..

Also Read:  பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் அவர் மனைவியுடன் ஒன்றாக வசிப்பதில் இருந்து ஏதோ காரணத்திற்காக எஸ்கேப் ஆக முயற்சித்திருக்கிறார். அப்போது அவரது மனதில் தோன்றியது தான் ‘கொரோனா பாசிட்டிவ்’ திட்டம்.

தனியார் கொரோனா பரிசோதனை மையத்தில் இருந்து கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்த அந்த 26 வயது இளைஞர். வேறு ஒருவரின் பெயருக்கு பதிலாக தன்னுடைய பெயரை மோசடியாக அதில் இடம்பெறச் செய்து அந்த ரிப்போர்டினை தன்னுடைய மனைவிக்கும், தனது தந்தைக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவைத்துவிட்டு எங்கேயோ திடீரென மாயமாகி உள்ளார்.

Also Read:  மயானத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மருத்துவமனையில் மரணம்!

இருப்பினும் அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாததாலும், தனது மகனின் நடவடிக்கைகள் மேல் சந்தேகம் எழும்பியதாலும், குறிப்பிட்ட தனியார் பரிசோதனை மையத்திற்கு நேரில் சென்று இது குறித்து விசாரித்திருக்கின்றனர். ஆனால் அது போலியான சான்றிதழ் என தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

அதே நேரத்தில் தனியார் பரிசோதனை மையத்தினர், 26 வயது இளைஞரின் மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு இளைஞருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவியுடன் வாழப்பிடிக்காமல் அவரிடம் இருந்து ஒதுங்க நினைத்த இளைஞர் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: