போகாத இடத்தை காட்டுது சார், மனைவி சந்தேகப்படுறாங்க.. கூகுள் மேப் மீது கணவன் போலீசில் புகார்..!

குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

போகாத இடத்தை காட்டுது சார், மனைவி சந்தேகப்படுறாங்க.. கூகுள் மேப் மீது கணவன் போலீசில் புகார்..!
  • Share this:
கூகுள் மேப் ஆப் உண்மைக்கு மாறான தகவல்களை காட்டுவதால் குடும்ப சிக்கல், குடும்ப வன்முறை, சித்ரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்திவருகிறார். சந்திரகேரனின் மனைவி ,  அவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி, அதில் கூகுள் மேப்-பின் யுவர் டைம் லைன் பகுதியை ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதில், கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாக காட்டியுள்ளது. இதனால் அவரது மனைவி தூக்கம் இல்லாமல் அதைப்பற்றியே சிந்தனையோடு இருந்து, அவர் மட்டும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையே பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.


மே மாதம் 20-ஆம் தேதி அவர் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் சந்தேகப்பட்டு, கணவரை விசாரித்துள்ளார்.

குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

கூகுளை நம்பிய சந்திரசேகரனின் மனைவி அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்த சந்திரசேகரன், கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading