என் பர்சில் இருந்த பணம் எங்கே? கேள்வி கேட்ட மனைவியின் மூக்கைக் கடித்த கணவர்!

கணவர் கைலாஷ் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

news18
Updated: July 19, 2019, 12:34 PM IST
என் பர்சில் இருந்த பணம் எங்கே? கேள்வி கேட்ட மனைவியின் மூக்கைக் கடித்த கணவர்!
ரேஷ்மா குல்வானி
news18
Updated: July 19, 2019, 12:34 PM IST
பர்சில் இருந்த ரூ.3 ஆயிரம் காணாமல் போனது தொடர்பாக கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கொடூரமாக கணவர் கடித்து வைத்துள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் கோடாசர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ரேஷ்மா குல்வானி, அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரது கணவர் கைலாஷ் குமார் சமீப காலமாக வேலையின்றி இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் குல்வானியின் பர்சில் இருந்த ரூ.3 ஆயிரத்தை காணவில்லை. இது தொடர்பாக கணவரிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


பணத்திருட்டு தொடர்பாக கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த கைலாஷ் குமார், மனைவியின் தலையைப்பிடித்து கீழே இழுத்துப் போட்டு அடித்துள்ளார். மேலும், மனைவியின் மூக்கை பலமாக கடித்துள்ளார்.

குல்வானியின் அழுகைக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். மேலும், ரத்தக்காயங்களுடன் இருந்த குல்வானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்ட குல்வானிக்கு மூக்கில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசாரிடம் குல்வானி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கைலாஷ் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Loading...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...