ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவி மாற்றி பாலியல் உறவு கொள்வதற்கு சம்மதிக்காத மனைவிக்கு ஏற்பட்ட துயரம்... அதிர்ச்சி சம்பவம்

மனைவி மாற்றி பாலியல் உறவு கொள்வதற்கு சம்மதிக்காத மனைவிக்கு ஏற்பட்ட துயரம்... அதிர்ச்சி சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

பாலியல் கொடுமைகளுடன், கணவர் மற்றும் அவரது வீட்டினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டும் பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bhopal, India

  மனைவியை மாற்றி பாலியல் உறவு கொள்ளும் விளையாட்டில் பங்கேற்க சம்மதிக்காத பெண் கணவரால் கடுமையாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் 5 ஸ்டார் ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றும் நபர் அம்மார். இவரின் மனைவி தற்போது கணவர் மீது பாலியல், குடும்ப வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், அம்மார் மது மற்றும் போதைப் பொருளுக்கு தீவிரமான அடிமை ஆனவர். மேலும், பல பெண்கள் மற்றும் ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவர்.

  அத்துடன் மனைவியுடன் பல முறை இயற்கைக்கு மாறான பாலியல் உறவிலும் ஈடுபட்டு கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அம்மார் தனது மனைவியை தான் பணியாற்றும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு மனைவியை ஜோடியுடன் மாற்றி பாலியல் உறவு கொள்ளும் விளையாட்டை விளையாட வேண்டும் எனக் கூறி வற்புறுத்தியுள்ளார். அதிர்ச்சியடைந்த மனைவி இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய அம்மார் ஹோட்டல் அறையில் இரண்டு நாள்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்.

  இதையும் படிங்க: துரந்தோ ரயிலுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளையர்கள் அட்டூழியம்.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

  பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற பெண், தந்தை வீட்டினருக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் விவரித்த நிலையில், தற்போது இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பாலியல் கொடுமைகளுடன், கணவர் மற்றும் அவரது வீட்டினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த பெண் நவீன கால பெண்ணாக இல்லை என்றும் குறை கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்ணின் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த காவல்துறை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Brutal attack on woman, Crime News, Husband Wife