இளம்பெண்ணை மணக்க, கர்ப்பமாக இருந்த மனைவிக்கு எச்.ஐ.வி பாத்தித்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய கணவனை கைது செய்துள்ளது ஆந்திரா காவல்துறை.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் சரண் (வயது 40). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இதையும் படிக்க : மனைவியை 50 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கணவன்.. டெல்லியை மிஞ்சிய ஷாக் சம்பவம்!
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அவர்களுக்குள் சண்டை வர தொடங்கியுள்ளது. ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய அவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி சண்டை போடத்துவங்கினார். வரதட்சணை கேட்டும் அடிக்கடி அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினார்.
இதனிடையே சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணை மணக்க, மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என உணர்ந்த அவர், மனைவியை விவாகரத்து செய்ய தகுந்த காரணத்தை தேடியுள்ளார்.
இதனிடையே சரணின் மனைவி கர்ப்பமானார். இந்நிலையில் ஆரோக்கியத்திற்காக ஊசி போட வேண்டும் என அழைத்து சென்று மனைவிக்கு ஊசி போட்டுள்ளார் சரண். சில நாட்களாக மனைவிக்கு உடல் வலியாக இருந்தது. சாதாரண வலி என நினைத்த அவர், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் உடல் வலி அதிகமானதும், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது, தான் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது சரணின் மனைவிக்கு தெரியவந்தது. அந்த இளம்பெண்ணை மணப்பதற்காக, ஆரோக்கியம் என்ற காரணம் சொல்லி, மனைவிக்கு ஊசி போடுவதாக அழைத்து சென்று, எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை செலுத்தியது அம்பலமானது.
தனக்கு எச்.ஐ.வி பாதித்தது பரிசோதனையில்தான் தெரியவந்தது. எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை செலுத்தி தன்னையும், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையும் கொல்ல முயற்சித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையில் சரணின் மனைவி புகாரளித்தார். இதைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணைக் கைதுசெய்து விசாரித்துவருகிறது.
இந்தச் சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Crime News, HIV, HIV Blood, Husband jailed, Husband Wife, Wife compliant